Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வை அறிவித்த மலிங்கா !

Advertiesment
ஓய்வை அறிவித்த மலிங்கா !
, செவ்வாய், 23 ஜூலை 2019 (14:11 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் மலிங்கா. தனது ஏர்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நடனமாட வைத்த இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தோடு அண்மைக் காலமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட மலிங்கா இப்போது சர்வதேசப் போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மலிங்கா வங்க தேச அணியுடனான தொடரில் விளையாடுகிறார்.

இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். . 219 இன்னிங்ஸ்களில் அவர் 315 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”பாராசூட்டுக்கு ஆசைப்பட்ட தோனி”..அனுமதி கொடுத்த ராணுவம்