இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

Siva
வியாழன், 19 ஜூன் 2025 (07:38 IST)
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து, இதுவரை 484 ரன்கள் குவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்கதேச அணியின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் நஜ்முல் அபாரமாக விளையாடி 148 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆதரவாக விளையாடிய ரஹிம் 163 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து வந்த லிட்டன் தாஸ், 90 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில், வங்கதேச அணி 151 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 484 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையைப் பொறுத்தவரை, பெர்னாண்டோ, ரத்நாயகே மற்றும் தரிந்து ஆகிய மூன்று பந்துவீச்சாளர்களும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இலங்கையின் சொந்த மண்ணில் அவர்களை அடித்து நொறுக்கிய வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு இலங்கை பேட்ஸ்மேன்கள் எப்படி பதிலடி கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments