ஐசிசி மகளிர் உலக கோப்பையை முதன்முறையாக வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ சரணி, முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோருடன் இன்று முதல்வர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, உலக கோப்பை வெற்றியில் முக்கியப் பங்காற்றிய 21 வயதான ஸ்ரீ சரணிக்கு பின்வரும் சலுகைகளை முதல்வர் அறிவித்தார்:
ரூ. 2.5 கோடி ரொக்கப் பரிசு.
குரூப் 1 நிலையிலான மாநில அரசுப் பணி.
கடப்பா மாவட்டத்தில் 1,000 சதுர அடி வீட்டு மனை.
இந்த அறிவிப்புகள், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.