மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதன்முறையாக ஐசிசி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியை பாராட்டி, பிசிசிஐ ஏற்கனவே ரூ. 51 கோடி பரிசு தொகையை அறிவித்தது.
இந்த சாதனைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு சிறப்பு பரிசை அறிவித்துள்ளது. அதன்படி, உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும், விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய டாடா சியாரா கார் பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடாவின் இந்த அசத்தல் பரிசு, இந்திய விளையாட்டு மற்றும் ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.