Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவிற்கு உகந்த துளசி மாலையின் சிறப்புகள்...!!

விஷ்ணுவிற்கு உகந்த துளசி மாலையின் சிறப்புகள்...!!
தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் துளசியும் ஒன்று. ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் துளசி செடிக்கு உள்ளது. மஹா விஷ்ணுவின் பதிவிரதையான தேவிக்கு துளசி என்று மற்றொரு பெயரும் உண்டு. துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும்  உள்ளது.
துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்டது தான் துளசி மணி மாலை. வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழிபட்டார்கள். துளசி செடியை வழிப்படும் வீட்டில் லட்சுமி வசிப்பாள்.
 
விஷ்ணுவின் அம்சம் தான் ஐயப்பன் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். விஷ்ணுவுக்கு துளசி மணி மாலையை அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
 
விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று. துளசி மாலையை மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மணி மாலையை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. 
 
கண்ணன் துளசி மணி மாலை அணிந்து இருப்பான். கண்ணன் ஐந்து தலை நாகத்தின் மீது நடனம் ஆடியவன் குளிர்ந்த மேனியன். எனவே தான் கண்ணன் துளசி மணி மாலை அணிந்து கொள்வான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-09-2019)!