Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்...!!

Advertiesment
அட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள்...!!
அட்சய திரிதியை தினத்தில்தான். அன்றைய நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
* மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம். இது  மட்டுமல்லாமல் தானம் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கும் உகந்த தினம் அட்சய திரிதியை.
 
* பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. வேதவியாசர் மகாபாரதத்தைச் சொல்ல விநாயகர் எழுதத் தொடங்கியது. அன்னபூரணித் தாயாரிடமிருந்து  சிவபெருமான் அன்னம் பெற்று தம் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டது.
 
* குபேரன், இழந்த செல்வங்களைத் திருமகளிடம் வேண்டிப் பெற்றதும் இந்நாளே. தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம்  பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய நாள்.
 
* மகாலட்சுமி, திருமாலின் மார்பில் நீங்காமல் வசிக்கும் வரத்தைப் பெற்ற நாளும் இது. தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள்.
 
* மற்ற நாள்களில் செய்யப்படும் தானத்தைவிடவும் அட்சய திரிதியையன்று செய்யப்படும் தானம் அதிக பலனைத் தரக்கூடியது. இன்று செய்யப்படும் புண்ணியமானது வருடம் முழுவதும் வளர்ந்துவரும் என்பது ஐதிகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் புத்திர தோஷம் நீங்க பரிகாரம்!!