Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஷ்ட பைரவர்களின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

அஷ்ட பைரவர்களின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!
சில சிற்ப நூல்களில் பைரவர்களை நூற்றி எட்டு வடிவங்களை குறிப்பிடுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றன.

1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர், 3.சண்ட பைரவர், 4. குரோத பைரவர், 5.கபால பைரவர், 6.உன்மத்த பைரவர், 7.பீஷ்ண பைரவர், 8.சம்ஹார பைரவர்.
அஷ்ட பைரவர் ஒவ்வொருவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.
 
சிவபெருமானானவர் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீபைரவரை உற்பத்தி செய்து அவரிடம் உலகினைக் காக்கும் பொறுப்பினை அளித்தார். அவர் உயிர்களுக்கும்  அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். 
 
அசுரர்களால் இந்த உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியை புராணங்கள் தெரிவிக்கின்றன.
 
சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவரைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர் வீற்றிருப்பது ‘பைரவ புவனம்’ என்று கூறப்படுகிறது. சிவலோகத்திலுள்ள சோதி மயமான இந்த கோட்டையில் எட்டு வாசல்களிலும் மகா பைரவர், உக்கிரபைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சாகர பைரவர் என்பவர்கள் காவல் செய்து  கொண்டிருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.
 
ஸ்ரீபைரவருக்கு சேத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. சேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கி காத்தருளினமையால் சிவனுக்கு சேத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு  தெரிவிக்கிறது. சேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய கோவிலைக் காப்பவர் பைரவர் என்றும் சொல்வார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-08-2020)!