Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்பிகையின் 10 வித தோற்றங்களும் பெயர்களும் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

அம்பிகையின் 10 வித தோற்றங்களும் பெயர்களும் பற்றி தெரிந்து கொள்வோம்...!!
1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும்  நிறைந்தவள்.
 
3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால்  தாக்குபவள். 
 
4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
 
5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
 
6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் எனப் பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின்  வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். 
 
7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும்  குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
 
8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம்  இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
 
9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
 
10. திரிபுர பைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-08-2020)!