Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருக பெருமானுக்கு உரிய நட்சத்திரங்கள் எவை தெரியுமா...?

Advertiesment
முருக பெருமானுக்கு உரிய நட்சத்திரங்கள் எவை தெரியுமா...?
செவ்வாய்க் கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் அற்புதமான நாளில், கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபடுவதால் கேட்டதையெல்லாம் தந்தருள்வான் வள்ளி மணாளன்.

செவ்வாய்க்கு நாயகன் முருகப் பெருமான். அதனால் தான் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமை போற்றப்படுகிறது. அதனால் தான் முருகக்  கடவுளுக்கு செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில், சிவ மைந்தனை வணங்கித் தொழுதால், செவ்வாய் முதலான தோஷங்கள் நீங்கும். செவ்வாயின் பலம் கிடைக்கப் பெறலாம். திருமணத்  தடைகள் நீங்கும். இதுவரை இருந்த தொழிலின் இறக்கங்கள் என்கிற நிலையெல்லாம் மாற்றியருளுவார் வெற்றிவேலன். இழந்த பதவியையும் புகழையும்  பொருளையும் தந்தருள்வார்.
 
வீடு மனை யோகம் தரும் பூமிகாரகனாகத் திகழும் செவ்வாய் பகவானை, செவ்வாய்க்கிழமையில் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வணங்கினால்  போதும். வீடு மனை யோகமெல்லாம் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.
 
இதேபோல், முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரங்கள் என்று சிலநட்சத்திரங்கள் உள்ளன. பூச நட்சத்திரம், உத்திர நட்சத்திரம், கார்த்திகை நட்சத்திரம் போல்,  விசாக நட்சத்திரமும் விசேஷமானது. வைகாசி விசாகம் மகத்துவம் வாய்ந்தது. அதே சமயம், ஒவ்வொரு மாதத்திலும் வருகிற விசாக நட்சத்திரமும்  விசேஷமானது. 
 
செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்த நன்னாளில், முருக வழிபாடு செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றி, வழிபட்டால் வேதனைகளையெல்லாம் தீர்ப்பான் ஞானவேலன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் பகவானின் அருளை பெற என்ன செய்யவேண்டும்...?