Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பட்டூரில் அமைந்துள்ள கோவிலின் சிறப்புகள் என்ன...?

Advertiesment
திருப்பட்டூரில் அமைந்துள்ள கோவிலின் சிறப்புகள் என்ன...?
திருப்பட்டூர் தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* திருப்பட்டூர் காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
 
* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக  மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.
 
* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
 
* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது  திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.
 
* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
 
* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாதா பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...!