கரூர்: குளித்தலையை சேர்ந்த ஸ்ரீ சர்வேஷ்வரரின் சீவேலி புறப்பாடு

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:14 IST)
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கரூர் அருகே குளித்தலையை சேர்ந்த ஸ்ரீ சர்வேஷ்வரரின் சீவேலி புறப்பாடு நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சக்ரபீடம் என்று அழைக்ககூடிய ஸ்ரீ சர்வேஷ்வரரின் சீவேலி புறப்பாடு நடைபெற்றது. குளித்தலை கடம்பர் கோவிலை சுற்றி பக்தர்களுடன் நடனமாடி வீதி உலா வந்தார். தேவர் ஆட்டம் மேளதாளத்துடன் நடைபெற்றது. 
பகவான் என்று அழைக்ககூடிய சர்வேஷ்வரர் பெண் வேடமிட்டு கையில் ஆயுதத்துடன் நடனமாடிக்கொண்டே கடம்பர்கோவிலை சுற்றிவந்து சபாபதிநாடார் தெருவில் உள்ள அவருடைய சக்ரபீடம் சென்றடைவார் அவருடன் வந்த விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் ஒவ்வொருவரும் பழங்கள், தானியங்கள், தென்னங்குறுத்து, நெற்பயிர் ஆகியவகளை எடுத்துகொண்டு அவர் பீடம் நோக்கி சென்றனர். இரவில் மயிலாட்டம், ஒயிலாட்டம் நடைபெறும். பிறகு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார் என அவ்விழா குழுவினர் தெரிவித்தனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கரூர்: மாரியம்மன் கோவில் 54-ஆம் ஆண்டு பால்குட விழா