Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில்பாலாஜி, ஜோதிமணியால் எனது உயிருக்கு அச்சுருத்தல் - ஆட்சியர் அன்பழகன்

செந்தில்பாலாஜி, ஜோதிமணியால் எனது உயிருக்கு   அச்சுருத்தல் - ஆட்சியர் அன்பழகன்
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (21:16 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கரூர் மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., எனது உயிருக்கு தி.மு.க., பொருப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியால்  உயிருக்கு அச்சுருத்தல் என்றும்., தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கும், அ.தி.மு.க., வேட்பாளருக்கும் கரூர் ரவுண்டா பகுதியில் ஒரே நேரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 
இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்,  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டது, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
 
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கரூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, தி.மு.க., கட்சியின் மாவட்ட பொருப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 
 
அப்போது சம்பவ இடத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள்  பிரசாந் குமார், மனோஜ் குமார் ஆகியேர் விசாரனை நடத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பிரச்சாரம் செய்ய கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டாவில் அனுமதி அளிக்கப்பட்டது. 
இது தொடர்பாக நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேட்டி அளிக்கும் போது திட்டமிட்டபடி பிரச்சாரம் நடைபெறும் என்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, அறிவுரைப்படி, தி.மு.க., மாவட்ட பொருப்பாளர் செந்தில்பாலாஜி உத்தரவு படி கட்சியின் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் குடியிருப்பு அத்துமீறி நுழையமுயன்றனர். 
 
மேலும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் எனக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களுக்கு என்ன நிலை என்று பார்த்து கொள்ளுங்கள். இது தொடர்பாக பொது தேர்தல் நடத்து அலுவலரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். 
 
நேர்மையான நடத்து அலுவலர்களுக்கு இது போல் மிரட்டல் விடுத்து கொண்டு இருக்கின்றனர் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிகோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை - ஸ்டாலின் கேள்வி