Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரிலும் தேர்தல் ரத்தா? ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிமணி!

Advertiesment
கரூரிலும் தேர்தல் ரத்தா? ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிமணி!
, புதன், 17 ஏப்ரல் 2019 (08:14 IST)
வேலூரில் பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதை காரணம் காட்டி அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள  நிலையில் நேற்று கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் அங்கும் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக வதந்திகள் கிளம்பி வருகின்றது. இந்த நிலையில் கரூரிலும் தேர்தல் ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என  தேர்தல் அதிகாரியும் அம்மாவட்ட கலெக்டருமான அன்பழகன், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கரூர்  கலெக்டரை   திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியும், வேட்பாளர் ஜோதிமணியும் மிரட்டியதாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை நேரில் மிரட்டியதாக மாவட்ட கலெக்டரும் புகார் அளித்துள்ளதால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
webdunia
இந்த நிலையில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் கலெக்டர் அன்பழகன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில்  கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என கலெக்டர் கூறுவதும், அதற்கு ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த ஆடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை: கனிமொழி