Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் வைத்து வணங்கவேண்டிய தெய்வ படங்கள் எவை தெரியுமா....?

Advertiesment
வீட்டில் வைத்து வணங்கவேண்டிய தெய்வ படங்கள் எவை தெரியுமா....?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.

ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின்  படத்தை வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
 
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
 
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். மணக்கோலத்தில் இருக்கும் முருகரின்  படத்தினை வைத்து வணங்கி வரலாம். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.
 
பொதுவாக வீட்டில் அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். 
 
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். குழந்தை  கடவுள் படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்து வணங்கி வரலாம்.
 
அன்னப்பூரணியின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதன்மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
 
அர்த்தநாரீஸ்வரரின் படத்தை வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.
 
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படத்தை வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத்தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாலட்சுமியை வீட்டில் குடிக்கொள்ள உரிய விரதங்களும் பலன்களும் !!