Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாலட்சுமியை வீட்டில் குடிக்கொள்ள உரிய விரதங்களும் பலன்களும் !!

மகாலட்சுமியை வீட்டில் குடிக்கொள்ள உரிய விரதங்களும் பலன்களும் !!
மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். 

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச்சிறந்தது.
 
இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ‘ஸ்ரீ பஞ்சமி’ என்று அழைப்பார்கள். அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின்  அருட்கடாட்சத்தைப் பெறலாம்.
 
மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில்  மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். 
 
அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும்.
 
மகாலட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.
 
சந்தனம், பன்னீர் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும். 
 
சந்தனம் திருமகளோடு அவதரித்து ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால்  லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் பல்லி எந்த திசையிலிருந்து சத்தமிட்டால் என்ன பலன்கள்...?