Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில செய்யக்கூடாத ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம் !!

சில செய்யக்கூடாத ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம் !!
சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கும்  செல்லக்கூடாது.
 
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு.
 
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
 
இறந்த முன்னோர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம். பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
 
புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
 
கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
 
கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும். அதாவது அந்த தானம் செய்த தர்ம  பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும். கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை  அளிக்காது.
 
இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். சுப காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது, பேசினால் சுபம் தடைபடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகப்பெருமானின் திருவுருவங்கள் எத்தனை உண்டு தெரியுமா...?