Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்று கூற காரணம் என்ன?

Advertiesment
வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்று கூற காரணம் என்ன?
கிழக்கு மேற்காக சூரியனின் பாதை செல்கின்றது. வடக்கு தெற்காக காந்தப் பாதை செல்கின்றது. பூமியில் வடதுருவம் தென் துருவம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள்  ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்வார்கள். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை  வைத்து படுக்கக்கூடாது என்றனர்.
 
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும்போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும்  உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
 
அடிக்கடி வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கு மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம். அதனால்தான் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து  படுக்கவைப்பார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து படி எப்படி கழிவறை அமைப்பது?