Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவிலுக்குள் வேகமாக வலம் வரக்கூடாது என்று கூற காரணம் என்ன?

Advertiesment
கோவிலுக்குள் வேகமாக வலம் வரக்கூடாது என்று கூற காரணம் என்ன?
ஆலயத்தில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தானே பலன் கிடைக்கும். கோயிலுக்குள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி  பார்ப்போம்.
கோயிலுக்குள் செல்லும் போது ஈர ஆடைகளுடன் செல்லக் கூடாது. ஆலயங்களை மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்ற எண்ணிக்கையில் வளம் வரலாம். கோவிலை வேகமாக எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருதல் பயனற்றது நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.
 
கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வேகமாக வலம் வருவார்கள். இது மிகவும் தவறானது. கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும் அல்லது அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்ற  நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள்.
 
ஒரு சிலரோ கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக  கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.
 
ஒரு நிறைமாத கர்ப்பிணி, எவ்வாறு நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே  இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது.
 
குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள்  எல்லாம் விலகி விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்? - வாஸ்து விளக்கம்