Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவசர இடைக்கால நிவாரணம் கோரும் ஏர்செல்: காரணம் என்ன?

Advertiesment
அவசர இடைக்கால நிவாரணம் கோரும் ஏர்செல்: காரணம் என்ன?
, செவ்வாய், 6 மார்ச் 2018 (14:09 IST)
ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ள நிலையில், உடனடியாக இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 
 
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6 வது இடத்தில் இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட அதிக போட்டி காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டு திவால் நிலைக்கு வந்துள்ளது. 
 
ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம். 
 
தற்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்குமாறு ஏர்செல் கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல், சுமார் 6,000 ஊழியர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி இருப்பதாலும், மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காகவும் அவரச இடைக்கால நிவாரண தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேறு பெண்ணுடன் தொடர்பு - அடையாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை