Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் – அதிர்ச்சியளித்த மரண வாக்குமூலம் !

Advertiesment
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் – அதிர்ச்சியளித்த மரண வாக்குமூலம் !
, வியாழன், 5 டிசம்பர் 2019 (09:33 IST)
புதுச்சேரியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியளித்துள்ளது.

புதுச்சேரி, அரியாங்குப்பத்தை அடுத்துள்ள சின்னகடைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில்தான் அவரைப் பெண் பார்த்து சென்றனர் என்பதால் திருமணம் பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்டாரோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. உள்ள புகைப்படக் கடை ஒன்றில் பெண் ஒருவர் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து பெறப்பட்ட மரணவாக்குமூலம் திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுள்ளது.

அதில்  ‘நான் வேலைப்பார்த்த புகைப்படக் கடையின் முதலாளி மதுரை என்பவர் எனக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வல்லுறவு மேற்கொண்டார். அதை வீடியோவாக எடுத்து மிரட்டி மேலும் சில முறை என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார்.’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து தலைமறைவாகியுள்ள புகைப்படக்கடை உரிமையாளர் மதுரையை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் அக்கா கணவரைத் தாக்கிய பெண் – எதற்குத் தெரியுமா ?