Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனவர்களின் வலையில் சிக்கிய இஸ்ரோ ராக்கெட்..

Advertiesment
மீனவர்களின் வலையில் சிக்கிய இஸ்ரோ ராக்கெட்..

Arun Prasath

, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (09:54 IST)
புதுச்சேரி மீனவர்களின் வலையில் இஸ்ரோ அனுப்பிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உருளை கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ஒரு பெரிய உருளை போன்ற ஒரு பொருள் அவர்களின் வலையில் சிக்கியுள்ளது. உடனடியாக அவர்கள் அந்த பொருளை படகுகளில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர்.

அதன் பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அது ராக்கெட்டில் உள்ள ஒரு பாகம் என கண்டறிந்தனர்.

அதாவது ராக்கெட்டை மேலே ஏந்திச்செல்ல பொருத்தப்படும் 5 எரிப்பொருள் உருளைகளில் ஒன்று என தெரியவந்தது. இந்த உருளைகள் ராக்கெட்டை சில தூரம் மேலே கொண்டு சென்ற சில நேரங்களில் தானாகவே ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்துவிடும். இதனை Strap on motor என அழைப்பார்கள்.

பின்பு இது குறித்த தகவல், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டது. பின்பு அவர்கள் அது ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து பிரிந்து கடலுக்குள் விழுந்த Strap on motor என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் அழைப்பை நான் ஏற்கவில்லை..சரத் பவார் பரபரப்பு