Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தேர்தலோடு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு அட்ரஸே இருக்க கூடாது... குஷ்பு ஆவேசம்

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (11:38 IST)
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்ற தேர்தலோடு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு அட்ரஸே இருக்க கூடாது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆவேசமாக பேசினார், 


 
கன்னியாகுமரியில், வரும் 13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருகை தர உள்ளார். ராகுலிலை வரவேற்பது மற்றும் பரப்புரை குறித்து  ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தலைமையில் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. 
 
இதில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில், நம்ம தமிழ்நாட்டு  அரசிலுள்ள இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., எங்கே இருக்கிறாங்கன்னு நமக்குத் தெரியாது. தேர்தலுக்கு பின்னாடி அவங்க இரண்டு பேரையும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கணும். அதுதான் நம்முடைய  பொறுப்பு. ஊழலுக்கும், நாற்காலியைக் காப்பாற்றுவதற்காக செயல்பட்டு வற்ற இந்த அரசு நமக்கு தேவையில்ல்லை. மக்கள் நலனை விரும்பும் அரசையும், அரசியலும் தான் நம்முடைய விருப்பமாக இருக்கணும். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி அடைந்த போதெல்லாம், மத்தியில் காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி அமைத்துள்ளது. இந்த முறையும் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இங்குள்ள மக்களின் எழுச்சியைப் பார்த்து கன்னியாகுமரிக்கு 13-ம் தேதி வரும் ராகுல் காந்தி பிரம்மிக்க வேண்டும். அவருக்கு உறுதியான நம்பிக்கையை நாம் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments