துரைமுருகன் வீடு முற்றுகை – திமுக vs தேமுதிக தொண்டர்களால் பரபரப்பு !

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (11:17 IST)
வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட முயல துரைமுருகனுக்கு ஆதரவாக திமுகவினர் கூட அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால்  தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுக வோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது.

ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளன. துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.  அதையடுத்து மாறி மாறி துரைமுருகனும் சுதீஷும் குற்றச்சாட்டுகளை வைக்க தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கருத்து மோதலின் அடுத்த கட்டமாக, வேலூரரில் உள்ள துரைமுருகனின் வீட்டை இன்று தேமுதிகவினர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் சிலர் திடீரென முற்றுகையிட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் "துரைமுருகன் ஒழிக" என கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதனால் போலீஸாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

விஷயமறிந்த திமுக தொண்டர்கள் சிலர் உடனடியாக அப்பகுதிக்கு வந்து துரைமுருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments