கனிமொழி, ராதிகா மற்றும் தமிழிசை ஆகிய மூவரும் போட்டியிட வாய்ப்பு இருப்பதால் தூத்துகுடி ஸ்டார் தொகுதியாக மாறும் என்று கூறப்படும் நிலையில் விருதுநகர் தொகுதியும் ஸ்டார் தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.
துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தாலும் அந்த தொகுதியில் தினகரனின் செல்வாக்கு அதிகம் என்பதால் தனது மகனை விருதுநகரில் களமிறக்க துணை முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளராக குஷ்பு போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் ஓபிஎஸ் மகனும் குஷ்புவும் மோதும் தொகுதியாக விருதுந்கர் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களமிறக்க தினகரன் திட்டமிட்டுள்ளாராம். இவர் களமிறங்கினால் மச்சான் சீமானும் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஓபிஎஸ் மகன், காளிமுத்து மகன் மற்றும் குஷ்பு ஆகியோர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதால் விருதுநகர் தொகுதி ஸ்டார் தொகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது