Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்: தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக அதிரடி

Advertiesment
மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்: தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக அதிரடி
, சனி, 2 மார்ச் 2019 (07:30 IST)
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்ட நிலையில் தேமுதிக இணைவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அதிமுக பிரச்சார வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது
 
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக தலைமை அதிரடியாக ஒருசில மாவட்ட செயலாளர்களை மாற்றியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கல் இன்று முதல் அப்பொருப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பொருப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேபோன்று  நீலகிரி மாவட்டச் செயலாளர் எம்.பி.அர்ஜூனன் நீக்கப்பட்டு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் நியமைக்கப்பட்டுள்ளார். 
 
மேலும் ஒன்றுப்பட்ட தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டச்செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீசுக்கு சவால்: முகநூல் நட்பு மூலம் 100 பெண்களை சீரழித்தவன் தலைமறைவு