அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.
தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.