தற்போது நாட்டில் இணையதளச் சுனாமியாக வீசிக்கொண்டிருப்பது மீடூ விவகாரமாகும்.திரைத்துறை மட்டுமல்லாது அத்துணை துறைகளிலும் ஊடாடிப்பரவியுள்ளது இந்த பாலியல்விவகாரம் .வட மாநிலத்தில் இது முதலிலேயே பிரபாலனவர்களின் மீது எழுந்து அவகளின் இமேஜ் காவு வாங்கப்பட்டாலும் கூட மெல்ல தைரியம் கொண்டு சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வர வேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் தற்போது பெண்களின் கூட்டமைப்பில் உலகம் முழுவதும் ஓங்கி ஒழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தழிழ்நாட்டில் சின்மயினால் தான் இவ்விவகாரம் தீயாய் பரவியது.
அதன் பிறகு பல பிரபலங்கள் மன்னிப்பு கோரினார்கள்.இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள் அதிகாரப்போர்வைக்குள்ளும், பணபலத்தில் வலிய தற்காலிக கூட்டுக்குள்ளும் உண்மையை மறைத்துவைத்து ஒழிந்துகொண்டிருப்பார்கள்.
பேருகால இறுதிநாளில் தாய்தன் சிசுவை வயிற்றில் உந்தி வெளியே தள்ளூவது போல இந்த காலமும் கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டீயிருக்கும் இந்த மீடூ மூலமாக சில கசப்பான உண்மைகளை வெளியே கொண்டுவரும்.
இந்நிலையில் அரசியல் தலைவ்ர்கள் அமைசர்கள் மீது மீடூ சர்ச்சை எழுந்துள்ளது அதன் அடுத்த படியாக தி.மு.க.தலைவர் ஸ்டாலின் ,துறைமுருகன் ,மற்றும் இன்னும் சில திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகள் உள்ளதாக அதிமுகஅமைச்சர் திடீரென குற்றம் சாட்டிருக்கிறார்.
இதனால் அடுத்து தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிகொண்டுள்ளது.
தன் மீதான குற்றசாட்டுகுறித்து தி.மு.என்ன விளக்கம் தரப்போகிறார் என அரசிய விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.