Publish Date: Sat, 05 Feb 2022 (17:06 IST)
Updated Date: Sat, 05 Feb 2022 (17:10 IST)
நீட் தேர்வு ரத்து குறித்த மசோதாவை ஆளுநர் ரவி அவர்கள் சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் ரத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் இதைச் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.