Publish Date: Thu, 03 Feb 2022 (18:13 IST)
Updated Date: Thu, 03 Feb 2022 (18:14 IST)
நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தபோது நீட் விலக்கு என்பது சட்ட பிரச்சினை என்றும் அதிமுக அரசு கையாண்ட மாதிரி தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாளுகிறது என்றும் கூறினார்
நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்/ நீட் விலக்கு பெறுவதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என்று கூறிய உதயநிதி ஜெயகுமாரின் கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்