தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணியை முறித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் கூட்டணி தொடருமா என்பது குறித்து ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து திருப்தியான முடிவு எட்டப்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். உள்ளாட்சியில் தனித்து போட்டியிட்டாலும் மாநில அளவில் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லாத நிலையில் நட்புடன் பிரிந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து கூட்டணியில் இருக்க விரும்புவதாக அவர்களது விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். அவர்களோடு மீண்டும் கூட்டணி உண்டா இல்லையா என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்” என கூறியுள்ளார்.