Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் எங்கு சென்றாலும் இந்தியர்களாக இருக்க வேண்டும்: லதா ரஜினிகாந்த்

Advertiesment
லதா ரஜினிகாந்த்

Mahendran

, வியாழன், 1 மே 2025 (18:16 IST)
நாம் எங்கு சென்றாலும் இந்தியத்துவம் என்பது நம்மிடமும், நாம் இருக்கும் இடத்திலும், நம்மை பாதுகாக்கின்ற சூழலிலும் இருத்தல் வேண்டும் என்று ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
இந்தியத்துவம் என்ற பண்பாடு எந்த ஒரு புது விஷயத்தையும் ஏற்றுக்கொள்வது தவறில்லை. குளோபல் அவர்னஸ் இருப்பது தவறில்லை. ஆனால் இந்திய மனப்பான்மை போய்விட கூடாது. நம் வாழ்வு முறை, நம் முன்னோர்கள் காட்டிய அழகான வாழ்க்கை முறை போய்விட கூடாது. எதற்கும் அடிமை ஆகிட கூடாது. 
 
ஒரு உடையாலோ, பேசுகின்ற முறையாலோ, ஒருத்தரது வாழ்க்கை முறையாலோ இது நிர்ணயிக்கப்படுவது இல்ல. மனதார இந்தியர்களாக இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் இந்தியத்துவம் என்பது நம்மிடமும், நாம் இருக்கும் இடத்திலும், நம்மை பாதுகாக்கின்ற சூழலிலும் அது இருத்தல் வேண்டும். அது நமக்கு மட்டுமில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களும் அவர்கள் அவர்கள் நாட்டை மனதில் வைத்திருப்பார்கள். 
 
அதுமாதிரி இந்தியத்துவம் என்பதற்கு ஒரு உயர்ந்த பண்பாடு இருக்கிறது. அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும். பண்பாடு என்பது மனதில் இந்தியர் என்பதை ஆரோக்கியமாக வைத்திருப்பது தான். ஒருத்தர் ஒரு ஆடை அணிவதாலோ, பேசுகிற மொழியினாலோ எல்லாம் கிடையாது. நீங்க குளோபல் சிட்ன்ஸாகவும் இருக்கலாம். 100 சதவீதம் இந்தியனாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானின் தலையை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்தவர் கைது.. யார் அவர்?