ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் போராக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே, இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து கண்டனக் கூட்டம் நடத்தினர். 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பாகிஸ்தானை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் இந்திய தேசியக்கொடி மற்றும் போராட்ட பதாகைகள் ஏந்தி இருந்தனர்.
இதற்கிடையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தூதரகத்தின் மேல் மாடியில் இருந்த நிலையில் அவர்களில் பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர் கர்னல் தைமூர் ரஹத், போராளிகளை நோக்கி கழுத்தை அறுக்கும் விதமான அசிங்கமான சைகையை வெளிப்படுத்தினார். அவரது கையில் அபிநந்தன் புகைப்படத்தையும் வைத்திருந்ததால் அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவதாக அவர் சொன்னதாக பலராலும் யூகிக்கப்பட்டது.
அந்த செயல் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி, மேலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வளர்ந்துவருகிறது.