Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

Advertiesment
WhatsApp

Prasanth Karthick

, திங்கள், 31 மார்ச் 2025 (09:36 IST)

ரயிலில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் சீண்டல் சம்பவங்கள் மற்றும் பிற குற்ற சம்பவங்களை தடுக்க தமிழக ரயில்வே போலீஸ் மேற்கொண்டுள்ள வாட்ஸப் குழு நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.

 

அதன்படி, தினம்தோறும் குறிப்பிட்ட ரயில்களில் பயணிக்கும் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் உள்ளிட்டவர்களோடு ரயில்வே பெண் போலீஸாரையும் இணைத்து ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸப் குழு தொடங்கப்பட்டுள்ளது.
 

 

அன்றாடம் ரயிலில் பயணிக்கும் இந்த பெண்கள் அந்த ரயிலில் ஏதேனும் பாலியல் சீண்டல் சம்பவங்களோ, குற்ற சம்பவங்களோ நடந்தால் உடனடியாக ஒரு போட்டோ, வீடியோ எடுத்து அந்த குழுவில் பகிர்ந்தால் மீத நடவடிக்கைகளை ரயில்வே போலீஸார் பார்த்துக் கொள்வார்கள்.

 

சென்னையில் 23 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக இந்த வாட்ஸப் க்ரூப் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு ரயிலில் பயணிக்கும் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.