சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அடுத்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கான உள்ளடக்கம், தேர்வு பாடத்திட்டம், கற்றல் இலக்குகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள் போன்றவைகளை புதிய பாடத்திட்டம் விரிவாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் முதல் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
பாடங்களை, பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் ஏற்புடைய வகையில் கற்பிக்க வேண்டும். அனுபவத்தால் கற்றல், திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள், மற்றும் முறைசார்ந்த அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, மாணவர்கள் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டு திறனை மேம்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.