Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

Advertiesment
Gaunder

Prasanth K

, திங்கள், 21 ஜூலை 2025 (10:31 IST)

புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு  சமூக நீதி திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்வு புதிய திராவிடர் கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்த சமூகநீதி பொதுக்கூட்டம் அனைத்து சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையில் நடைபெற்ற ஒரு சிறப்பான நிகழ்வாக மாறியது

 

 

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஹரி நாடார்,மற்றும் விசிக மாநில நிர்வாகி ஆகியோர் கூறுகையில் சமூக நீதிக்கான ஒரே அரசு திமுக எனவும்,கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி மிக  சிறப்பாக பணியாற்றி வருவதாகவும்,அவர் பொறுப்பில் இருப்பதாலேயே இந்தப்பகுதிகளில் இதுபோன்ற சமூகநீதி கூட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கிறது என்று கூறினார்.

 

 

 

இந்நிகழ்ச்சி தொடர்வதற்கு முன்பாக கொங்கு மண்டலத்தின் சிறப்பான பூர்விக நிகழ்வான வள்ளி,கும்மியாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 200க்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்தனர்.

 

 

சுமார் 1000க்கு மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களை ஒன்று திரட்டி ஒரே மேடையில் பல தலைவர்களை அழைத்து இந்நிகழ்வை நடத்திய புதிய திராவிடர் கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் அவர்கள் அரசியல் சூளுரைத்தார்.அவர் பேசுகையில் விரைவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் 6வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும்,இப்போது சிலர் ரோட் ஷோ செல்கிறார்கள் நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் பங்குபெறும் ரோட் ஷோவை பார்க்க போகிறார்கள் அனைவரும்! சுமார் 1லட்சம் இருக்கைகள் போட்டு உதயநிதி பங்குபெறும் அந்த 6வது மாநில மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை கொங்கு மண்டலத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என சூளுரைத்தார்.இந்த பேச்சு தற்போது 2வது மாநாடு நடத்தும் தவெகவையும்,விஜயின் ரோட் ஷோவையும் குறிப்பிட்டு பேசுவது போன்று இருந்தது.

 

 

அது மட்டுமில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கைவசம் சென்று பல கொங்கு மக்கள் இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் அரசியல்படுத்தப்படாமல்,வளர்ச்சி அடையாமல் மிகவும் தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். தற்போது நடக்கும் திமுக தலைமையிலான சமூக நீதி அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்த கொங்கு மண்டலம் செந்தில் பாலாஜியின் செயல்களால் மிக சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளாதாகவும்,அதிமுகவுக்கு 2026 தேர்தல் கொங்கு களம் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் எனவும் பேசினார்.

 

 

இறுதியில் பேசுகையில் அனைத்து சமுதாய மக்களும் அரசியல்படுத்தப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்றால் இந்த சமூக நீதி   அரசாக செயல்படும் திமுக அரசை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் அது மட்டுமில்லாமல் இந்த கொங்கு மண்டலம் சமூக நீதி மண்டலமாக மாற்ற வேண்டும் என்றால் நம் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு மு.க.ஸ்டாலின் அவர்களை கண்முடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்..! 

 

கே.எஸ்.ராஜ் கவுண்டரின் உரையில் தெரியவருவது என்னவென்றால் கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தவும்,திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி செய்து வரும் செந்தில்பாலாஜிக்கு முழு ஆதரவு இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறார் அதற்கு தகுந்தார் போல் நவம்பர் மாதம் நடக்கும் புதிய திராவிடர் கழகத்தின் 6வது மாநில மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது..! உதயநிதியின் வருகை கூடுதல் பலத்தைப்பெரும் எதிர்பார்க்கப்படுகிறது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!