Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை போரூரில் 250 கார்களில் பற்றிய தீ ...என்ன காரணம்..?

சென்னை போரூரில் 250  கார்களில் பற்றிய தீ ...என்ன காரணம்..?
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (11:10 IST)
சென்னை போரூரில்  நேற்று மாலைவேளை தீ விபத்து ஏற்பட்டது. போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஓட்டோ என்ற தனியார் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 250 க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியானது.
ஒட்டோ என்ற கால் டாக்ஸி நிறுவனத்துக்கு சொந்தமான இந்தக் கார்கள்  நிறுத்தபட்டிருந்த 4 முதல் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் ஓரத்தில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. 
 
இதுதான் மளமளவென தீப் பரவியதற்கான காரணம் என்று தெரிகிறது. இந்த ரசாயன கழிவுகளை கொட்டியதுடன் இதில் அலட்சியமாக இருந்ததனால் தான் அருகில் உள்ள கார்களுக்கும் இந்த தீ பரவியதாக தெரிகிறது.
 
கார்களில் தீ பற்றியபோது அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு அரசியல் கூடாது...! ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிப் பேசினாரா கமல்...?