சென்னை விமானத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது பேசிய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருக்கும் போதே எனக்கு தெரியும். அவருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அவருடைய தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நான் என்று கூறினார்.
மேலும் எந்த வேட்பாளரை எந்த தொகுதியில் நிறுத்துவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். அரசியலில் ஒரு சமதளம் இருக்க வேண்டும். வேறு எந்த துறையில் வாரிசு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் அரசியலில் அப்படி இருக்கக் கூடாது.
சமீபகாலமாகவே திமுவை குற்றம் சுமத்தி வரும் கமல்ஹாசன் தற்போது வாரிசு அரசியல் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேசமயம் கமல்ஹாசன் கோலோச்சிய சினிமா துறையில் தற்போது அவரது மகள்கள் அஹ்சரா ஹாசன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.