திருப்பதி திருமலைக்கு செல்லும் திருக்குடைகள் ஊர்வலம், வட சென்னையில் நாளை  நடைபெறுகிறது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	 ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். வாகன ஓட்டிகள் ஈவெரா பெரியார் சாலை, ராஜாஜி சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலை ஆகிய மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.
 
									
										
			        							
								
																	
	 
	ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாகனங்கள் பேசின் பாலம் சாலை, மின்ட் சாலை, பிரகாசம் சாலை, ராஜாஜி சாலை ஆகிய மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.
 
									
											
									
			        							
								
																	
	 
	ஊர்வலம் சூளை, ஓட்டேரி, மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாகச் செல்லும்போதும் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும். வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, நாராயணகுரு சாலை மற்றும் புரசைவாக்கம் நெடுஞ்சாலை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைத்து, பயண நேரத்தை குறைத்துக்கொள்ள மாற்று வழிகளை பயன்படுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.