Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

jayakumar

Senthil Velan

, புதன், 17 ஜனவரி 2024 (15:55 IST)
அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக  உள்ளதாகவும், ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துக்களை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர் என்றும் தெரிவித்தார்.
 
அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை பின்பற்றி திரைப்படங்களில் கழகத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்து அதிமுக வெற்றியடைய செயல்பட்டவர் எம்ஜிஆர். ஆகவே எம்ஜிஆர் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என ஜெயக்குமார் கூறினார்

 
அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது என்பது இலவுகாத்தகிளி கதை போன்றுதான் என விமர்சித்த அவர், தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும் போது தாமரை மலர்வது நடக்காது என தெரிவித்தார்.
 
அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக உள்ளதாகவும் ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும் என்றும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக மாவட்ட தலைவர் கைது.! திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்..!!