Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடுப்பளவு தண்ணீர்.. மக்களை பார்க்க வெள்ளத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Advertiesment
Jayakumar
, புதன், 6 டிசம்பர் 2023 (10:20 IST)
சென்னை ராயபுரம் பனைமரத் தொட்டி வண்ணார் தெரு, மேற்கு மாதா கோயில் தெரு, ஜி எம் பேட்டை பள்ளப்பகுதி, முனியப்பன் தெரு, திருவேங்கடம் தெரு மதகோவில் காசிமேடு ஆகிய பகுதிகளில் மிக் ஜாம் புயலால்  பெய்த மழையில் இந்த பகுதிகளில் நெஞ்சு அளவுக்கு மழை நீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்


 
மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கு பால் இன்றி தவிக்கின்றனர் மேலும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி காணவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் தெரிவித்தனர்.

மேலும் இதை அறிந்த முன்னாள் அமைச்சரும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மழை நீரில் கட்சியினருடன் சேர்ந்து தெரு தெருவாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு மதிய உணவை வழங்கினார் மேலும் கடந்த ஆட்சியில் பெய்த மழையின் போது தேங்கியுள்ள நீரை ஜெட் ராடு மூலம் மின்சாரம் மோட்டாரர்கள் மூலமும் அகற்றி வந்தோம் இப்போது யாரும் வராததால் எங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவு போல் வீடுகளிலேயே முடங்கி உள்ளோம் உணவளிக்க கூட யாருமே வரவில்லை என்று குற்றச்சாட்டை பொதுமக்கள் வைத்தனர் மேலும் வயதான பாட்டி ஒருத்தர் தனது வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளன.

மேலும் எங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறி ஜெயிக்குமாரின் கைகளை பற்றி கொண்டு கண்கலங்கி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் அரசு சார்பாக உடனடியாக அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீரையும் கழிவு நிறையும் அகற்றி விடக் கோரி ஜெயக்குமார் கோரிக்கை வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல் நின்றும் விடாத மழை; 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!