திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் திமுக கூட்டணியிலும் சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் உள்பட ஒரு சில கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் பாமக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் எந்தெந்த கட்சிகள் என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.