சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய வந்த குழு தமிழக அரசு வெள்ள நிவாரண பணியை சிறப்பாக செய்தது என்று கூறிய நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதால் மத்திய குழு பாராட்டி உள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை, பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இதனால் நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.
வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய குழு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்த நிலையில் ஆய்வுக்கு பின் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தது. வெள்ள நிவாரண பணிகள் குறித்து கருத்து தெரிவித்த ஆய்வு குழுவின் தலைவர் தமிழக அரசின் பணியை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக, பாஜக உடன் ரகசிய உறவு வைத்துள்ளது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அதனால் தான் மத்திய குழு திமுக அரசை பாராட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்