Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலைப்பட்டியலை வைத்த விக்கிரமராஜா: சிறிது நேரத்தில் தூக்கி எறிந்த கடைக்காரர்கள்

Advertiesment
விலைப்பட்டியலை வைத்த விக்கிரமராஜா: சிறிது நேரத்தில் தூக்கி எறிந்த கடைக்காரர்கள்
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (07:33 IST)
விலைப்பட்டியலை வைத்த விக்கிரமராஜா
சென்னையில் மளிகை பொருட்களின் விலை பட்டியலை வியாபாரிகள் தங்கள் கடைகள் முன் வைக்கும் நிகழ்வு ஒன்றை வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வைத்த நிகழ்ச்சி நடந்த சில நிமிடங்களில் அந்த விலைப்பட்டியலை கடைக்காரர்கள் தூக்கி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நியாய விலை கடைகளில் இருப்பது போன்று ஒவ்வொரு கடையிலும் பொருட்களின் விலையை குறிப்பிடும் விலைப்பட்டியல் வைக்கும் நிகழ்ச்சியை வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை வடபழனியில் உள்ள மளிகை கடைகளில் அவர் விலைப்பட்டியல் உள்ள போர்டுகளை வைத்த நிலையில், அவர் விலைப்பட்டியல் போர்டை வைத்து விட்டு சென்ற பிறகு சிறிது நேரத்தில் கடைக்காரர்கள் அதை அகற்றி விட்டனர்
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் விலைகள் தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஏற்பட்டிருக்கும் நிலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்த இந்த முயற்சிக்கு வியாபாரிகள் சிறிதுகூட ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வண்டி வாடகை உயர்ந்துள்ளதாகவும் வேலை ஆள் பற்றாக்குறையால் வேலைக்கு வரும் நபர்களின் சம்பளம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வணிகர் சங்க தலைவர் கூறிய விலையில் விற்பனை செய்ய முடியாது என்றும் வியாபாரிகள் கூறி வருகின்றனர்
 
ஆனால் பொருள்களின் விலை உயராத நிலையில் இலாப நோக்கத்துடன் வியாபாரிகள் பலமடங்கு விலைகளை உயர்த்துவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மளிகை பொருட்களின் விலை மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று சட்டம் இருக்க நிலையில் இந்த சட்டத்தை சட்டை செய்யாமல் மளிகை கடை வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு பொருட்களின் விலையை ஏற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரபரப்பிலும் மீண்டும் ஆட்சியை பிடித்த ஆளும்கட்சி: தென்கொரியாவில் கொண்டாட்டம்