Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் - விக்கிரம ராஜா

Advertiesment
பிளிப்கார்ட் அமேசான் போன்ற  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை  தடை செய்ய வேண்டும் - விக்கிரம ராஜா
, வியாழன், 19 டிசம்பர் 2019 (21:40 IST)
வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பிளிப்கார்ட் அமேசான் போன்ற  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்  என கரூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்தார்.
 

கரூரில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பிளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் இந்தியாவில் வர்த்தகம் பெருமளவில் நசுங்கி விட்டது .

இதனால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு வருகிறது. ஏறக்குறைய 87 ஆயிரம் கடைகள் பூட்டப்பட்டுள்ளது .37 சதவீத வியாபாரம் நசுங்கி விட்டது .இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் பொருளாதார சீரழிவு ஏற்படுவது சர்வ நிச்சயம்.

ஆறு வாக்குகளுக்கு ஒரு வாக்கு வீதம் உள்ள வணிகர் சங்க பேரமைப்பு பொதுஜன தொடர்பு, வருங்காலத்தில் தங்களது வாக்கு வங்கியை எதிர்நிலையில் பயன்படுத்த நேரிடும் என்பதை ஆளும் மத்திய மாநில அரசுகள் உணர்ந்து அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற வணிக நிறுவனங்களில் ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மேலும் வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா முழுவதும் கடையடைப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் வரும் மே 5 ஆம் தேதி திருவாரூரில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் மத்திய-மாநில துறைசார்ந்த அமைச்சர்களை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் கொலை செய்தாலும் தப்பில்லை: காவல்துறை அதிகாரி ரவி