விஜயகாந்த் மறைவிற்குப் பின் தேமுதிக அவரின் மனைவி பிரேமலதா வழிநடத்தி வருகிறார்.. மேலும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் தேமுதிகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.. எனவே அவரும் தனது அம்மா பிரேமலதாவுடன் இணைந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.. தேமுதிக நிர்வாகிகள் இல்ல திருமண விழா, மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் செல்கிறார்கள். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
202 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்த போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தோல்வியடைந்தார்.. ஆனால் திமுக திட்டமிட்டு அவரை தோல்வியடைய வைத்ததாக அப்போது பிரேமலதா குற்றம் சாட்டினர்..
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைக்கும் அரசியல் கட்சியிடம் மகனுக்கு ஒரு எம்.பி சீட் வாங்கி விட வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார்.. அது நடக்குமா என்பது தெரியவில்லை. அதிமுக, திமுக என இரு கட்சியிடமும் தேமுதிக கூட்டணிக்காக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேமுதிக நிர்வாகி கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன் நான் எம்எல்ஏ, எம்பி ஆவது முக்கியமல்ல.. என் அம்மா ஆவது முக்கியமல்ல.. இந்த கட்சிக்காக உழைத்த நீங்கள் கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி ஆகணும்,, உங்களுக்காகத்தான் நாங்கள் கட்சிக்கு வந்திருக்கிறோம் என்ன பேசியிருக்கிறார்.