எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் பயணித்திருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் பலமுறை சட்டமன்ற உறுப்பினரக இருந்திருக்கிறார். 9 முறை கோபிசெட்டிபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதிமுகவில் மூத்த நிர்வாகி. இவருக்கும் எடப்பாடி பழனிச்சிற்கும் கடந்த சில மாதங்களாகவே உரசல் நீடித்து வந்த நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன்.
எனவே அவர் தனி கட்சி துவங்கவரா? இல்லை திமுகவில் இணைவாரா/ அல்லது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரோடு இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவாரா என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் செங்கோடையன் தன்னை விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
நேற்று விஜய் தரப்பை சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று காலை பனையூர் அலுவலகம் சென்று விஜயின் முன்னிலையில் தவவெகவில் இணைந்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
20 வயது இளைனஞாக இருக்கும்போதே புரட்சித்தலைவரின் மன்றத்தில் இணைந்தவர். அந்த வயதிலேயே எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அதன்பின் அவரின் பயணத்தில் அந்த இயக்கத்தில் இருபெரும் தலைவர்களின் பெரும் நம்பிக்கையை பெற்றவர். 50 வருடங்களாக ஒரே கட்சியில் பயணித்துள்ள அண்ணன் செங்கோடையனின் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். அவர்களையும், எங்களோடு இனைந்து பணியாற்றவும், மக்கள் பணி செய்யவும் வந்துள்ள எல்லோரையும் வரவேற்கிறேன். நல்லது நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் என பேசியிருக்கிறார்.