Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரம்ஜான் வாழ்த்து..!

Advertiesment
ramjan

Mahendran

, திங்கள், 31 மார்ச் 2025 (10:45 IST)
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி,  கவர்னர் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் "அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளரட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
 
"நோன்பிருந்து, உறவுகளுடன் நட்பு, நெஞ்சங்களுடன் அன்பை பரிமாறி, ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாளை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்து மகிழ்கிறேன்."
 
என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் வெடிகுண்டு தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!