Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 5 March 2025
webdunia

விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு: வேல்முருகன்

Advertiesment
விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு: வேல்முருகன்

Siva

, திங்கள், 11 மார்ச் 2024 (07:46 IST)
விஜய்யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன் ’சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள், 50 லட்சம் என்று ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

 தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும், நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.

சமீபத்தில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வைத்து தான் வேல்முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி: ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்