Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவுக்கு இருக்கும் இடம் கூட இல்லாம போகும்... எச்சரிக்கும் கி.வீரமணி!

Advertiesment
அதிமுகவுக்கு இருக்கும் இடம் கூட இல்லாம போகும்... எச்சரிக்கும் கி.வீரமணி!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (14:06 IST)
ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போது அதிமுகவினர் செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும் என கி.வீரமணி விமர்சனம். 

 
தமிழகத்தில் முன்னதாக கருணாநிதி ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மறைந்த ஜெயலலிதா அறிவித்தார். 
 
தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் தொகுப்பு பையில் பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 
webdunia
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்வரும் காலங்களிலும் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 
ஆனால் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இதனை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார். ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போது அதிமுகவினர் செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும் என விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்