Publish Date: Wed, 01 Dec 2021 (22:14 IST)
Updated Date: Wed, 01 Dec 2021 (22:16 IST)
இன்று தன்னிடம் திமுகவின் வளர்ச்சிக்காக நிதி வழங்கியவர்கள் குறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவாது:
மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மணிமாறன் அவர்கள் ஐந்து லட்சம் ரூபாயை திமுக இளைஞரணி வளர்ச்சி நிதிக்காக சமீபத்தில் என்னிடம் வழங்கினார். அண்ணன் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் அவர்களின் நேர்முக உதவியாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இரண்டாயிரம் ரூபாயை திமுக இளைஞரணி வளர்ச்சி நிதிக்காக வளர்ச்சி நிதிக்காக என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.